• Login / Register
  • செய்திகள்

    கடும் மருந்துத் தட்டுப்பாடு : ஆபத்தில் இலங்கை நோயாளிகள்

    இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் உயிர்காக்கும் மருந்துகளுக்கும் இலங்கையில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

    அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் 80 சதவிகித மருந்துகளின் இறக்குமதி நின்று போய் உள்ளது. டயாலிசிஸ் செய்தற்கான ஊசிகள், புற்றுநோய் மருந்துகள்,  உள்பட 180 வகையான  மருந்துகள், மருத்துவப் பொருட்கள் விறுவிறுவென கையிருப்பு குறைந்து வருகின்றன. இலங்கையின் மருத்துவக் கட்டமைப்பு நிலைகுலைந்துபோய் உள்ளது.

    தலைநகர் கொழும்பின் புறநகர்ப்பகுதியில் 950 படுக்கைகள் கொண்ட அபேக்சா புற்றுநோய் மருத்துவமனையில், மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக அறுவை சிகிச்சைகள், முக்கிய பரிசோதனைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

    இதேநிலை நீடித்தால் புற்றுநோயாளிகள் பலரது நிலை சிக்கல்தான். ‘அவர்களுக்கு மரண தண்டனை கொடுப்பதைப் போல நிலைமை அமைந்து விடும்’ என்று மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    இதேப்போல தீவிரமான உடல்நலக்குறைவுடன் உயிருக்குப்போராடும் பிற நோயாளிகளும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.


    Leave A Comment