• Login / Register
  • செய்திகள்

    200 நாடுகளால் தேடப்பட்ட குற்றவாளி – காதலியால் சிக்கிய பரிதாபம்

    மெக்சிகோ நாட்டு போதைப்பொருள் கடத்தல் மன்னன் பிரையன் டொனாசியானோ ஓல்குன் வெர்டுகோ. இவரைச் சுருக்கமாக எல் பிட் என அழைப்பார்கள்.

    தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களை சட்டத்துக்குப் புறம்பாக விற்பனை செய்ததாக எல் பிட் மீது  பல வழக்குகள் உள்ளன.   200க்கும் மேற்பட்ட நாடுகளால் தேடப்படும் ஒரு முக்கிய குற்றவாளியாக இவர் இருந்து வந்தார்.

    இந்த  எல் பிட்டுக்கு, மற்றொரு கடத்தல் மன்னனான எல் சாப்போ கஷ்மெனின் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருந்து வந்தது.

    இந்த நிலையில் எல் பிட், தனது காதலியும் மாடல் அழகியுமான ஒரு பெண்ணுடன் மெக்சிகோ நாட்டு கலி நகரின் கடற்கரையில் உல்லாசமாக பொழுதை கழித்தார். அந்த நேரம் இருவரும் சேர்த்து சில புகைப்படங்களை எடுத்தனர்.


    எல்பிட், அவரது காதலி நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டார்.

    எல்பிட்டின் இந்த முகநூல் பதிவைப் பார்த்து கொலம்பிய பாதுகாப்பு அதிகாரிகள், இரண்டு வாரங்கள் போதைப்பொருள் கடத்தல் மன்னனான எல்பிட்டைப் பின் தொடர்ந்தனர்.

    இதனையடுத்து, எல் பிட் தனது காதலியுடன் தங்கியிருந்த ஆடம்பரமான குடியிருப்பு பகுதிக்குள் அதிரடியாக நுழைந்த காவல்துறையினர், எல் பிட்டை கைது செய்தனர்.

    தன்னை கைது செய்ய வந்த காவல்துறையினருக்கு எல் பிட் சுமார் 2,65,000 அமெரிக்க டாலர்களை  லஞ்சமாகத் தரமுயன்றுள்ளார்.

    ஆனால் அதிகாரிகள் அதற்கு மசியவில்லை. தற்போது, கோகோயின் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில், வழக்குத் தொடர்வதாக எல்பிட் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்று தெரிகிறது.

    Leave A Comment