• Login / Register
  • செய்திகள்

    களத்தில் 950 வேட்பாளர்கள்; தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது!

    மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் இன்று (19) வெள்ளிக்கிழமை காலை 07.00 மணி முதல் தொடங்கியுள்ளது.

    களத்தில் 950 வேட்பாளர்கள்...

    தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 874 ஆண்கள், 76 பெண்கள் என 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    இந்த தேர்தலில், தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

    இம்முறை 10.92 லட்சம் முதல்முறை அதாவது 18-19 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

    இதுதவிர, பதிவு செய்ததன் அடிப்படையில் 85 வயதுக்கு மேற்பட்ட 6.14 லட்சம் வாக்காளர்கள், 4.61 லட்சம் மாற்றுத் திறன் வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர்.

    7 கட்டங்களாக தேர்தல்... 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று...

    இந்தியாவின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

    இதுதவிர, தமிழகத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும் இன்று நடைபெறுகிறது.

    தமிழகத்தில் 39 மக்களவை தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணிக்கு முடிவடைகிறது.

    மாலை 6 மணிக்கு வாக்காளர்கள் அதிக அளவில் காத்திருக்கும் பட்சத்தில், அப்போது வரை உள்ள வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி, அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    தமிழகம், புதுச்சேரியில் மக்கள் ஆர்வமுடன் காலை முதல் வாக்களித்து வருகின்றனர்.

    Leave A Comment