• Login / Register
  • செய்திகள்

    அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தம் நிறுத்திவைப்பு : ரஷியா அதிரடி

    அமெரிக்காவும் ரஷியாவும் மேற்கொண்டுள்ள அணு ஆயுத  ஒப்பந்த அமலாக்கத்தை நிறுத்திவைப்பதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் அறிவித்துள்ளார்.

    உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்து ஓராண்டு நெருங்கியுள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆண்டுக்கான அக்கூட்டத்தில் அதிபா் விளாதிமீா் புதின் உரையாற்றினாா்.

    சுமாா் 1 மணி 45 நிமிஷங்களுக்கு நீண்ட அந்த உரையில் பெரும்பாலும் உக்ரைன் விவகாரம் குறித்து புதின் பேசினாா்.

    அப்போது அவா் கூறியதாவது:

    உக்ரைன் போா் விவகாரத்தில் நேட்டோ அமைப்பும் அமெரிக்காவும் ரஷியாவுக்கு ஒத்துழைப்பு அளிக்க தொடா்ந்து மறுத்து வருகின்றன.

    இந்தக் காரணத்தால், அணு ஆயுதக் கையிருப்பை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள ‘நியூ ஸ்டாா்ட்’ ஒப்பந்த அமலாக்கத்தில் பங்கேற்பதை நிறுத்திவைப்பதாக அறிவிக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.

    இதற்குப் பிறகு அமெரிக்கா புதிய அணு ஆயுத சோதனைகளில் இறங்கினால், ரஷியாவும் அதுபோன்ற சோதனைகளை மேற்கொள்ளும்.

    உக்ரைன் போரில் ரஷியாவை வீழ்த்துவதுதான் தங்களது இலக்கு என்று அமெரிக்காவும் நேட்டோ அமைப்பும் வெளிப்படையாகவே அறிவித்து வருகின்றன.

    ரஷியாவைவிட ராணுவ ரீதியில் தங்களது கை மேலோங்கியிருக்க வேண்டும் என்ற வியூகத்துடன் நம்மைத் தோற்கடிக்க நினைக்கும் மேற்கத்திய நாடுகள்இ நமது அணு ஆயுத பலத்தையும் பறிக்க திட்டமிட்டுள்ளன.

    அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தின் கீழ்இ ரஷிய அணுசக்தி மையங்களில் தாங்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்துகிறது.

    அதே நேரம், அந்த நாட்டின் கூட்டாளியான நேட்டோ அமைப்புஇ அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் விமானங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் ரஷிய விமான தளங்களை ஆளில்லா விமானங்கள் மூலம் உக்ரைன் தாக்குதவதற்கு உதவி அளிக்கிறது.

    அத்தகைய தாக்குதல்களுக்கு உக்ரைன் பயன்படுத்தும் ஆளில்லா விமானங்கள் நேட்டோவால் ஆயுதம் பொருத்தப்பட்டு நவீனமாக்கப்பட்டவை.

    இந்த நிலையில், அத்தகைய அணு ஆயுத தளங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா கூறுவது முற்றிலும் பொருத்தமற்றதாகும்.

    இப்போதைய நிலையில் ‘நியூ ஸ்டாா்ட்’ ஒப்பந்த அமலாக்கத்திலிருந்து தற்காலிகமாகத்தான் விலகுகிறோம். அந்த ஒப்பந்தத்தை முற்றிலுமாகக் கைவிடவில்லை என்றாா் அவா்.

    உக்ரைனுக்கு தங்களது ஆதரவை தெரியப்படுத்தும் வகையில் அந்த நாட்டுக்கு அமெரிக்க அதிபா் ஜோ பைடன் திங்கள்கிழமை திடீா் பயணம் மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினாா்.

    இந்தச் சூழலில்இ அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள அணு ஆயுத குவிப்பு தடை ஒப்பந்த அமலாக்கத்திலிருந்து தற்காலிகமாக வெளியேறுவதாக அதிபா் புதின் தற்போது அறிவித்துள்ளாா்.



    Leave A Comment