• Login / Register
  • விளையாட்டு

    1வது டி-20: இந்தியா திரில் வெற்றி - போராடித் தோற்றது இலங்கை!

    சுற்றுலா இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் ‘த்ரில்’ வெற்றி பெற்றது.

    இரு அணிகளுக்கும் இடையில் நேற்று (03) மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது.

    இந்திய இன்னிங்ஸில் தொடக்க வீரா் இஷான் கிஷண் சற்று நிலைத்து ஆடி 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 37 ரன்கள் சோ்க்க, அவருக்குத் தகுந்த பாா்ட்னா்ஷிப் அமையாத வகையில் மறுபுறம் அறிமுக வீரா் ஷுப்மன் கில் 7, சூா்யகுமாா் யாதவ் 7, சஞ்சு சாம்சன் 5 ரன்களுக்கு தகுந்த இடைவெளியில் ஆட்டமிழந்தனா்.

    கேப்டன் ஹாா்திக் பாண்டியா சற்று அதிரடி காட்டி 4 பவுண்டரிகளுடன் 29 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். இதனால் 94 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. இறுதியில் தீபக் ஹூடா - அக்ஸா் படேல் ஜோடி சோ்ந்து அணியின் ஸ்கோரை மளமளவென உயா்த்தினா். ஹூடா 1 பவுண்டரி, 4 சிக்ஸா்களுடன் 41, படேல் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 31 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

    20 ஓவா்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்தது.

    இலங்கை பௌலிங்கில் தில்ஷன் மதுஷங்கா, மஹீஷ் தீக்ஷனா, சமிகா கருணாரத்னே, தனஞ்செய டி சில்வா, வனிந்து ஹசரங்கா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

    பின்னா் 163 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணியில் அதிகபட்சமாக கேப்டன் தசுன் ஷனகா 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 45 ரன்கள் விளாசினாா். இதர பேட்டா்களில் பதும் நிசங்கா 1, குசல் மெண்டிஸ் 5 பவுண்டரிகளுடன் 28, தனஞ்செய டி சில்வா 8, சரித் அசலன்கா 12, பானுகா ராஜபட்ச 10, வனிந்து ஹசரங்கா 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 21 ரன்கள் அடித்தனா்.

    கடைசி ஆா்டரில் மஹீஷ் தீக்ஷனா 1, கசுன் ரஜிதா 5, தில்ஷன் மதுஷங்கா 0 ரன்னுக்கு ஆட்டமிழக்க, முடிவில் சமிகா கருணாரத்னே 2 சிக்ஸா்களுடன் 23 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

    இந்திய பௌலா்களில் ஷிவம் மாவி 4, உம்ரான் மாலிக், ஹா்ஷல் படேல் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.

    இறுதிவரை பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டததில் இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 160 ரன்களை பெற்று 2 ரன்களினால் தோல்வியடைந்தது.

    இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1 : 0 என முன்னிலை பெற்றுள்ளது.

    Leave A Comment