• Login / Register
  • செய்திகள்

    ரமலான் திருநாள்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து

    நாடுமுழுவதும் ரமலான் திருநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வழக்கமான உற்சாகத்துடன் இஸ்லாமியர்கள் அனைவரும் ரமலான் திருநாளை கொண்டாடி வருகின்றனர். 

    ரமலான் திருநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை இஸ்லாமிய மக்களுக்குத் தெரிவித்து வருகின்றனர்.

    குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், டிவிட்டரில் இந்தி மொழியில் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில், "ரமலான் மாதத்தின் முடிவில் கொண்டாடப்படுகிறது ஈகைப் பெருநாள். இப்பண்டிகையைக்கு ஏழைகளுக்கு உணவும், உணவு தானியமும் தானமாக வழங்கப்படுகிறது. ரம்ஜான் பண்டிகை நல்லிணக்கத்தையும், அமைதியும், வளமும் நிறைந்த சமூகத்தையும் ஊக்குவிக்கிறது.


    இந்நாளில் நாம் அனைவரும் மனிதகுல சேவைக்காக நம்மை அர்ப்பணிப்போம். ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றப் பாடுபடுவோம்.

    இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    பிரதமர் மோடி வெளியிட்டுள்ள தனது வாழ்த்து செய்தியில், அனைவருக்கும் வாழ்த்துக்கள் இந்த ரமலான் நன்நாளில் ஒற்றுமையும், சகோதரத்துவமும் மேம்படட்டும். அனைவரும் ஆரோக்கியமாகவும் வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு மோடி கூறியுள்ளார்.

    தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

    புனித ரமலான் மாதம் முழுவதும் தங்கள் நோன்புக் கடமையை ஆற்றி, ஏழை எளியவருக்கு உதவிகள் புரிந்து, அன்பு, இரக்கம், கருணை, ஈகை ஆகிய உயரிய பண்புகளை உலகுக்கு வெளிப்படுத்தும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும், நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.

    அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக தங்களது வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளனர்.

    அதில், ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை, எளியோருக்கு அளித்து, அனைவரும் இன்புற்று வாழந்திட வேண்டி இறைவனை தொழுது, இஸ்லாமிய பெருமக்கள் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி மகிழ்வார்கள். இந்த இனிய திருநாளில் அவர்களுக்கு நல்வாழ்த்துகள்‘ என்று வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

    பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  ரமலான் கற்று தரும் பாடங்களை இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, அனைத்து மதத்தவரும் கடைபிடிக்க வேண்டும். அதை கடைபிடித்தால் உலகம் முழுவதும் மனிதம் தழைக்கும் என்பது உறுதி. எனத் தெரிவித்துள்ளார்.

    மக்கள் நீதிமய்யக் கட்சியின் தலைவர் கமலஹாசன், டிவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

    பிறை பார்த்தலில் தொடங்கி பிறை பார்த்தலில் நிறைவுறும் நோன்புக் காலம் ரமதான். சுய கட்டுப்பாடு, பிறர் மேல் பரிவு, ஈகை, சகோதரத்துவம், நன்மை விழைவு போன்ற பண்புகளைச் சிந்திக்கவைக்கும் காலத்தில், இந்நன்னாளைக் கொண்டாடும் சகோதரர்களுக்கு என் வாழ்த்துக்கள். என தெரிவித்துள்ளார்.




    Leave A Comment