• Login / Register
  • செய்திகள்

    நைட்கிளப்பில் ராகுல் காந்தி: வைரலாகும் வீடியோ

    நேபாளத்தின் தலைநகர் காட்மண்டுவில் உள்ள ஒரு நைட்கிளப்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இருப்பது போன்ற ஒரு காணொலி தற்போது வைரலாகி வருகிறது.

    பாரதிய ஜனதா தலைவர்கள் பலர் இந்த காணொலியை டிவிட்டரில் பகிர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

    பாரதிய ஜனதா கட்சியின் தொழில்நுட்ப பிரிவின் தலைரான அமித் மால்வியா, ‘மும்பை பறிபோகும் நேரம், காங்கிரஸ் கட்சி வெடிக்கும் நேரம் ராகுல் காந்தி நைட்கிளப்பில் இருந்தார்’ என டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

    மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ, ‘விருந்து கொண்டாட்டங்கள், விடுமுறைகள், பிக்னிக்குகள், மகிழ்ச்சி சுற்றுலாக்கள், வெளிநாட்டுப் பயணங்கள் எல்லாம் இந்த நாட்டுக்குப் புதிது இல்லை. ஒரு தனிநபர் இப்படி எல்லாம் செய்தால் அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், எம்.பி. ஒருவர், ஒரு தேசிய அரசியல் கட்சியின் நிரந்தர பாஸ் ஒருவர், மற்றவர்களுக்கு உபதேசம் செய்கிற ஒருவர் இப்படிச் செய்யலாமா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

    பா.ஜ.க வின் டெல்லி முன்னாள் தலைவரான மனோஜ் திவாரி, ‘காங்கிரஸ் கட்சிக்குத்தான் பிரச்சினைகள் ‘குடும்பத்துக்கு ’ அல்ல’ என கிண்டல் செய்திருக்கிறார்.


    இந்த காணொலி எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. இதுபற்றி காங்கிரஸ் கட்சி இதுவரை எந்த கருத்தும் கூறவில்லை.

    பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணம் பற்றி காங்கிரஸ் கட்சி டிவிட்டரில் கருத்து  வெளியிட்டிருந்தநிலையில் அதற்கு பதிலடியாக ராகுல் காந்தியின் இந்த நைட்கிளப் காணொலி வெளியிடப்பட்டுள்ளது.

     

    Leave A Comment