• Login / Register
  • செய்திகள்

    மதுரை கல்லூரி டீனாக மீண்டும் ரத்தினவேல் நியமனம்

    மதுரை அரசு மருத்துவக் கல்லூரியின் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ், மாணவர்களுக்கான வரவேற்பு விழா கடந்த மாதம் 30ஆம் தேதி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு, மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் தலைமை தாங்கினார். விழாவிற்கு கல்லூரி முதல்வர் ரத்தினவேல் முன்னிலை வகிக்க, சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில், முதலாம் ஆண்டு மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றதால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

    இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மதுரை கல்லூரி டீன் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

    இதனிடையே சமஸ்கிருத உறுதிமொழி தொடர்பாக ஆட்சியர் நடத்திய விசாரணையில் பங்கேற்ற மருத்துவக் கல்லூரி மாணவர்கள், உறுதிமொழியேற்பில் டீன் ரத்தினவேல் குற்றமற்றவர் என விளக்கம் அளித்தனர்.


    இந்த நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  சட்டபேரவையில் இன்று, மதுரை கல்லூரி டீனாக ரத்தினவேல் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    மதுரை கல்லூரி டீன் ரத்தினவேல், நேரில் சந்தித்து அளித்த விளக்கத்தையேற்று அவரை மீண்டும் மதுரை கல்லூரிக்கு டீனாக நியமனம் செய்துள்ளதாகவும், அவரின் கட்டுப்பாட்டிலேயே மதுரை கல்லூரி இருப்பதாகவும் அமைச்சர் சட்டமன்றத்தில்  தெரிவித்தார்.

    Leave A Comment