• Login / Register
  • செய்திகள்

    பொங்கல் பண்டிகை; 16,932 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

    பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 16,932 பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

    விழா நாள்களில் சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களுக்காக அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் பொதுமக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்குச் செல்லும் வகையில், சென்னையில் 6 முனையங்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

    அந்தவகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி பேருந்துகளில் முன்பதிவு கடந்த மாதம் 12 ஆம் தேதி தொடங்கியது. தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அரசு விரைவுப் பேருந்துகளில் இருக்கைகள் நிரம்பிவிட்டன. பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல இதுவரை 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    இந்நிலையில், பொங்கலுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

    இதில், சென்னையில் இருந்து 10,749 பேருந்துகளும் பிற ஊர்களில் இருந்து 6,183 பேருந்துகளும் ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் 16,932 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

    Leave A Comment