• Login / Register
  • செய்திகள்

    கோழி இறைச்சி விலை வீழ்ச்சி - மேலும் குறைவடையும் வாய்ப்பு!

    இலங்கையில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இதன்படி, எதிர்வரும் வாரங்களில் கோழி இறைச்சியின் விலை மேலும் குறைவடையக்கூடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டு 900 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

    இதெவேளை, 1 கிலோ ஆட்டு இறைச்சி 3,300 ரூபாவாகவும் 1 கிலோ மாட்டிறைச்சி 2400 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment