• Login / Register
  • செய்திகள்

    மக்களவை தேர்தல்: 3 மணி நிலவரம் - 51.41 சதவீத வாக்குகள் பதிவு

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு  விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், மாலை 3 மணி நிலவரப்படி 51.41 சதவீத வாக்குகள்  தமிழ்நாட்டில் பதிவாகியுள்ளன. 

    தருமபுரி மக்களவைத் தொகுயில் 57.86 சதவீதமாகவும், நாமக்கலில் 57.67, கள்ளக்குறிச்சி 57.34, ஆரணி 56.73, கரூர் 56.65, பெரம்பலூர் 56.34, சேலத்தில் 55.53, சிதம்பரம் 55.23, வில்லுபுரம் 54.43, ஈரோட்டில் 54.13, அரக்கோணம் 53.83, திருவண்ணாமலையில் 53.72, விருதுநகரில் 53.45, திண்டுக்கல் 53.43, கிருஷ்ணகிரி 53.37, வேலூரில் 53.17 சதவீதமாகவும்,

    பொள்ளாச்சியில் 53.14 சதவீதமாகவும், நாகப்பட்டினத்தில் 52.72, தேனியில் 52.52, நீலகிரியில் 52.49, கடலூரில் 52.13, தஞ்சாவூரில் 52.02, மயிலையில் 52.00, சிவகங்கையில் 51.79, தென்காசியில் 51.45, ராமநாதபுரம் 51.16, கன்னியாகுமரியில் 51.12, திருப்பூர் தொகுதியில் 51.07, திருச்சியில் 50.70, தூத்துக்குடியில் 50.41, கோவையில் 50.33, காஞ்சிபுரத்தில் 49.94, திருவள்ளூரில் 49.82, நெல்லையில் 48.58, மதுரையில் 47.38, ஸ்ரீபெரும்புதூரில் 45.96, வட சென்னையில் 44.84, தென் சென்னையில் 42.10, மத்திய சென்னையில் 41.47 வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.




    Leave A Comment