• Login / Register
  • மேலும்

    நீங்கள் கிராம்பு டீ பிரியரா..? கிராம்பு டீயை குடிக்க முதல் இதனை தெரிந்துகொள்ளுங்கள்


    கிராம்பு பல வகையிலும் உடலுக்கு நன்மையளிக்கக்கூடியது, குறிப்பாக பல் வலி முதல் செரிமான பிரச்சனை, சளி தொந்தரவு, வயிறு எரிச்சல், உடல் எடைக்குறைப்பு போன்ற பலவற்றிற்கு தீர்வாக உள்ளது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். இவ்வாறு பல்வேறு நன்மைகளைக் கொண்ட கிராம்பு டீ யை குடிப்பதால் பல நன்மைகள் கிடைக்கிறது.

    ஆரோக்கியம் நிறைந்த கிராம்பு டீ ரெடி. இந்த டீ யை நீங்கள் ஒரு டம்ளருக்கு மேல் அருந்தக்கூடாது எனவும், அப்படி நீங்கள் அருந்தும் பட்சத்தில், பல்வேறு உடல் நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஜெயா ஜோஹ்ரி. இதோடு நீங்கள் வேறு ஏதேனும் உடல் நல பிரச்சனைகளுக்கு மாத்திரைகள் எதுவும் சாப்பிட்டு வந்தால், மருத்துவரின் பரிந்துரைக்குப் பிறகு தான் நீங்கள் கிராம்பு டீயை உட்கொள்ள வேண்டும்

    முதலில் கிராம்பு டீ தயாரிக்கும் முறை எப்படி என்று பார்க்கலாம்;

    தேவையான பொருள்கள் :

    கிராம்பு – 4

    தண்ணீர் – 1 கப்

    செய்முறை:

    ஒரு கனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இதனுடன் கிராம்புகளைப் போட்டு நன்றாக கொதிக்க விடவும். பின்னர் அடுப்பை அணைத்துவிடவும்.  

    இனிப்பு சுவையுடன் நீங்கள் கிராம்பு டீ சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் 2 ஸ்பூன் தேனைக் கலந்து சாப்பிடலாம்.

    நீங்கள் தயார் செய்யும் கிராம்பு டீக்கு அதிக சுவையைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் இதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.


    கிராம்பு டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

    நாம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கிராம்பில் அதிகளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இவற்றை நம்முடைய உணவு முறையில் சேர்த்துக்கொள்ளும் போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

    கிராம்பில் வைரஸ் எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் உள்ளதால் காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றிற்கு இந்த டீ பயனுள்ளதாக உள்ளது.

    கிராம்புகளில் வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே அதிகளவில் உள்ளது. இது பாக்டீரியா தொற்றுக்கு எதிராக போராடுகிறது. எனவே நீங்கள் அதிக காய்ச்சலில் இருக்கும் சமயத்தில் மாத்திரைகள் சாப்பிட்டாலும் கிராம்பு டீயை அருந்தினால் குணமாகும்.

    செரிமான பிரச்சனைக்கு தீர்வு காண்பதோடு, உடல் எடைக்குறைப்பிலும் கிராம்பு டீ உதவியாக உள்ளது.

    ஈறு மற்றும் பல் வலி என்றாலே மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னதாக வீடுகளில் கிராம்பு எங்கிருக்கிறது என்று தான் தேடுவோம். ஆம் இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஈறுகளின் வீக்கத்தைக் குறைத்து பல் வலிக்கு நிவாரணமாக உள்ளது. எனவே நீங்கள் கிராம்பு டீ யை தயார் செய்து அருந்தும் போது, வாயில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களையும் அகற்ற உதவியாக உள்ளது.

    சைனஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு கிராம்பு டீ சிறந்த மருந்தாக உள்ளது. இதில் உள்ள யூஜெனால் சளியை அகற்ற உதவுகிறது.
    கிராம்புகளில் கிருமி நாசினிகள் அதிகம் உள்ளதால், தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு தீர்வாக அமைகிறது.



    நாள்பட்ட மூட்டுவலி பிரச்சனை உள்ளவர்களுக்கும் கிராம்பு டீ தீர்வாக அமைகிறது. கிராம்பில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் வீக்கத்தைக் குறைத்து மூட்டு வலியைக் குறைக்க உதவுகிறது.

    சமீபத்திய ஆய்வின் படி, நாம் கிராம்பு டீ யை அருந்தும் போது, மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

    இதுப்போன்று பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளதால், தினமும் கூட நீங்கள் கிராம்பு டீ யை எடுத்துக்கொள்ளலாம். அதே சமயம் ஒரு கப்பிற்கு மேல் நீங்கள் அருந்தக்கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும். 

    ஒருவேளை நீங்கள் கிராம்பு டீ குடித்தவுடன் வாந்தி, குமட்டல் போன்ற ஏற்பட்டால் இதை அருந்துவதை முற்றிலும் நிறுத்திக்கொள்ள வேண்டும்.


    Leave A Comment