• Login / Register
  • செய்திகள்

    இலங்கையில் ஈரான் ஜனாதிபதி; அமெரிக்கா பொருளாதார தடை எச்சரிக்கை!

    அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் ஈரான் ஜனாதிபதி இலங்கை வந்துள்ள நிலையில் அமெரிக்காவின் பொருளாதார தடை தொடர்பான எச்சரிக்கை தகவல் வெளியாகியுள்ளது.

    ஈரான்-இஸ்ரேல் இடையேயான போர் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி அன்று காலை மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தார்.

    இந்நிலையில், ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்கும் அபாயம் உள்ளதாக, அமெரிக்கா இன்று (24) எச்சரிக்கை விடுத்துள்ளது. 
     
    ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பாகிஸ்தானுக்கான தனது 3 நாள் விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று (24) இலங்கையை வந்தடைந்ததையடுத்து அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. 
     
    ஜனாதிபதி ரைசியின் பாகிஸ்தான் விஜயத்தின் போது, ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. 
     
    இந்நிலையில், ஈரானிய ஜனாதிபதி இன்று இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தினை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார். 
     
    அத்தோடு, இந்த விஜயத்தின் போது இலங்கை மற்றும் ஈரானுக்கிடையில் 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment