• Login / Register
  • செய்திகள்

    நான்கு நாட்களுக்கு மிதமான மழை: இன்று 13 மாவட்டங்களில் மழை!

    தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய தென் மேற்கு வங்க கடலில் நிலவிய, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து விட்டது.

    இதனால், தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில், வரும், 27ம் தேதி வரை மிதமான மழைக்கே வாய்ப்புள்ளது.

    சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யும். அதிகபட்சம், 29 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.

    மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை.

    இதேவேளை, இன்றைய தினம் 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    சென்னை, விழுப்புரம், தருமபுரி, கடலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், தாமரைப்பாக்கத்தில், 3 செ.மீ., மழை பெய்துள்ளது.

    சென்னை கலெக்டர் அலுவலகம், கும்மிடிப்பூண்டி, கீழ்பென்னாத்துார், பொன்னேரி, பூண்டி, தண்டையார்பேட்டை, ஆவடி, சென்னை நுங்கம்பாக்கம், 1 செ.மீ., மழை பெய்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Leave A Comment