• Login / Register
  • சினிமா

    "இந்தில பேசாதிங்க"; மனைவிக்கு ஏ.ஆர்.ரகுமான் இட்ட அன்புக்கட்டளை!

    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்  சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தமிழில் பேசவேண்டியதன் முக்கியத்துவத்த உணர்த்தக்கூடியவர். சமீபத்தில்  ஏ.ஆர்.ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவுடன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

    இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமனுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கப்பட்டது. ஏ.ஆர். ரகுமான் பேசி கொண்டிருந்தபோது, தனது மனைவியையும் மேடைக்கு பேச வரும்படி அழைத்துள்ளார். 



    அப்போது ஏ.ஆர். ரகுமான் என் பேட்டிகளை நான் திரும்பி பார்க்க விரும்ப மாட்டேன். ஆனால் என் மனைவி திருப்பி, திருப்பி விரும்பி பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர் என கூறினார். இதனைத் தொடர்ந்து அவரது மனைவி முன் பேச தயாரானார். அப்போது மனைவியிடம், இந்தியில் பேசாதீங்க தமிழில் பேசுங்கள் ப்ளீஸ் என்று ஏ.ஆர்.ரகுமான் அன்பு கட்டளை விடுத்தார். 

    இதன்பின் பேசிய அவரது மனைவி, மன்னிக்கவும், தமிழில் சரளமாக பேச எனக்கு வராது. அதனால், தயவு செய்து மன்னித்து விடுங்கள். நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவருடைய குரல் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது குரலில் சொக்கி போய் விடுவேன் என்று கூறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


    Leave A Comment