• Login / Register
  • சினிமா

    விஜய்-க்கு சர்வதேச கௌரவம் - கொண்டாடும் விஜய் ரசிகர்கள்!

    விஜய்-இன் 'மாஸ்டர்' திரைப்படத்தின் போஸ்டரை பிரதி செய்து விம்பிள்டன் சாம்பனை கௌரவப்படுத்தும் விதமாக விம்பிள்டன் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் அனைவரது கவத்தையும் ஈர்த்துள்ளது.

    விஜய் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட்டான மாஸ்டர் படத்தின் போஸ்டரை விம்பிள்டன் டென்னிஸின் சமூக வலைதள பக்க அணி ரீ கிரியேட் செய்துள்ளது.

    இதன் மூலம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளார் நடிகர் விஜய்.

    விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்றது.

    இதில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் மற்றும் ஸ்பெயின் நாட்டின் கார்லஸ் அல்காரசும் மோதினம். 4 மணி நேரம் 42 நிமிடங்கள் நீடித்த இந்த பரபரப்பான ஆட்டத்தில் 1-6, 7-6, 6-1, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் கார்லஸ் வெற்றி பெற்றார்.

    இந்த வெற்றியின் மூலம் உலகின் நம்பர் ஒன் வீரர் என்ற பட்டத்தையும் அல்காரஸ் தக்க வைத்துக் கொண்டார். 20 வயதாகும் அல்காரசிற்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    அந்த வகையில் விம்பிள்டன் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் அவரை கௌரவப்படுத்தும் வகையில் வெளியிட்டுள்ள போஸ்டர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    விம்பிள்டன் சோஷியல் மீடியா பக்கத்தில் விஜய்யின் மாஸ்டர் பட போஸ்டரை ரீ கிரியேட் செய்து விம்பிள்டன் பட்டம் வென்ற கார்லஸ் அல்காரசு-ஐ பிரதியீடு செய்து பதிவிட்டுள்ளார்கள்.

    இதன் மூலம் சர்வதேச கவனத்தை நடிகர் விஜய் பெற்றுள்ளார்.

    இதனை விஜய்யின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இதேவேளை, நடப்பு விம்பிள்டன் தொடரின் போட்டி ஒன்றை காணவந்த டென்னிஸ் உலகின் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரரை 'தலைவா' எனும் தமிழ் அடையாளத்தின் மூலம் விம்பிள்டன் கௌரவப்படுத்தியிருந்தது.

    விம்பிள்டன் போட்டியை காண ‘விம்பிள்டன்’ போட்டி நடைபெற்ற இடத்திற்கு குடும்பத்துடன் ரோஜர் ஃபெடரர் வந்திருந்தார்.

    இதைப் பாராட்டும் விதமாக பல்வேறு பதிவுகளைப் பதிவிட்ட விம்பிள்டன் நிர்வாகம் தன் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில், ‘தலைவா’ என்ற தமிழ் வார்த்தையை 'THALAIVA' என குறிப்பிட்டு ரோஜரின் புகைப்படத்தை இணைத்து வெளியிட்டுந்த நிலையில் தற்போது விஜய்-இன் மாஸ்டர் திரைப்பட போஸ்டரை பிரதிசெய்து போஸ்டர் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment