• Login / Register
  • சினிமா

    தோனியின் லெட்ஸ் கெட் மேரிட்; வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக்

    தோனியின் தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் லெட்ஸ் கெட் மேரிட் திரைப்படத்தின் முதல்பார்வை வெளிவந்துள்ளது.

    மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர். 

    இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கின்றனர். 

    இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

    இந்த நிலையில் 'எல்.ஜி.எம்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    Leave A Comment