• Login / Register
  • செய்திகள்

    தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை!

    தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஆங்காங்கு கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையல் இன்று 17  மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

    இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், 

    தமிழகம் மற்றும் கடலோர ஆந்திரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 

    தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

    இன்று நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

    மேலும் இன்று முதல் நான்கு நாள்களுக்கு கனமழை தொடரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 

    சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராசிபுரம் 20, பொன்னனியார் அணை, பாண்டவையாறு, வத்தலை அணைக்கட்டு, நன்னிலம், பொன்னேரி, பொன்னமராவதி தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளன. 

    மீனவர்கள் இன்று குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

    Leave A Comment