• Login / Register
  • செய்திகள்

    இலங்கை; ஜனாதிபதி செயலகத்தின் பணிகள் 100 நாட்களின் பின்னர் இன்று ஆரம்பம்!

    இலங்கை ஜனாதிபதி செயலகத்தின் பணிகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.

    இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலக வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட 'கோட்டா கோ கோம்' போராட்டத்தின் காரணமாக தடைப்பட்டிருந்த ஜனாதிபதி செயலக பணிகள் 100 நாடகளின் பின்னர் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளன.

    இலங்கை தலைநகர் கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் கடந்த ஏப்ரல் 9ம் திகதி 'கோட்டா கோ கோம்' போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

    கடந்த ஜூலை 9ம் திகதி இடம்பெற்ற மக்கள் கிளர்ச்சி மூலம் கோட்டாபய ராஜபக்ச இலங்கையை விட்டு தப்பியோடியிருந்தார்.

    இதையடுத்து புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற நிலையில் ஜனாதிபதி செயலக சூழலில் தங்கியிருந்த போராட்டக்காரர்கள் இரவோடு இரவாக படையினரை கொண்டு விரட்டியடிக்கப்பட்டிருந்தனர்.

    இதனையடுத்து இன்றைய தினம் ஜனாதிபதி செயலக பணிகள் வழமைபோன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment