• Login / Register
  • சினிமா

    பிரபல நடிகர் சரத்பாபு காலமானார்!

    பிரபல நடிகர் சரத்பாபு இன்று காலமானார்.

    இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு, சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் தமிழில் ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களுடன் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    நாயகன்இ வில்லன்இ குணச்சித்திர நடிகர் என பல பாத்திரங்களை ஏற்று நடித்தவர் சரத்பாபு. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

    கடந்த வாரம் சரத்பாபு காலமானதாக  சமூக வலைதளங்களில்   தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர்  நடிகர் சரத்பாபுவின் சகோதரி, சமூகவலைதளங்களில் சரத்பாபு குறித்து பரவிய செய்திகள் பொய்யானது என விளக்கமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment