• Login / Register
  • ராசி பலன்கள்

    இன்றைய நாள் எப்படி? 16 ஏப்ரல் 2024!

    செவ்வாய்கிழமை

    16 - 04 – 2024

    சோபகிருது ஆண்டு – சித்திரை - 03 ஆம் தேதி

    மேஷம்:

    மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்புகள் அதிகமாக இருக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு தடை சொல்ல யாராவது முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். அம்மா அப்பா அக்கா அண்ணன் என்று உங்களை எதுவும் செய்ய விடாமல் தடுப்பதற்கு ஒரு கூட்டம் இருக்கும். இதனால் கொஞ்சம் மனசு சோர்வடையும். பெரியவர்கள் சொல் பேச்சு கேட்டு நடப்பதில் தவறு ஒன்றும் கிடையாது. முன்கோபடாதீர்கள். பொறுமையாக இந்த நாளை கடந்து செல்லுங்கள். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

    ரிஷபம்:

    ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்க போகின்றது. நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். வேலை செய்யும் இடத்தில் எப்போதுமே பிரச்சனையாக இருந்த மேல் அதிகாரி உங்களுக்கு இன்று ஆதரவாக பேசுவார். நீண்ட நாள் இழுப்பறியாக இருந்து வந்த கோர்ட்டு கேஸ் வழக்குகள், மற்ற பிரச்சனைகள் எல்லாம் இன்று முடிவுக்கு வரும். சந்தோஷத்தில் இன்று நிச்சயமாக நீங்க ஏதாவது ஒரு இனிப்பை வாங்கி சாப்பிடுவீங்க.

    மிதுனம்:

    மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. நிறைய தண்ணீர் குடிங்க. உடம்பை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்க. உடம்புக்கு சூடு தரும், எளிதில் ஜீரணம் ஆகாத பொருட்களை இன்று சாப்பிடாமல் இருப்பது நல்லது. அன்றாட வேலை, தொழில் எல்லாம் சுமூகமாக செல்லும். நிதி நிலைமை சீராக இருக்கும்.

    கடகம்:

    கடக ராசிக்காரர்கள் இன்று உறுதியோடு இருப்பீர்கள். எந்த வேலையில் இருந்தும் பின்வாங்க மாட்டீர்கள். உங்களை நம்பி ஒப்படைத்த வேலையை சிறப்பாக செய்து கொடுப்பீர்கள். இதனால் நல்ல பாராட்டுகள் கிடைக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.

    சிம்மம்:

    சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த நட்பு, உறவு இவைகளை சந்திக்க வாய்ப்புகள் உள்ளது. உடல் அசதி சில பேருக்கு இருக்கும். கொஞ்சம் வயதானவர்கள் எல்லாம் உங்கள் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். நல்ல வெயில் அடிக்கும் நேரத்தில் வெளியில் செல்ல வேண்டாம். வாகனங்களில் செல்லும்போது கூடுதல் கவனம் இருக்கட்டும்.

    கன்னி:

    கன்னி ராசிக்காரர்கள் இன்று சிக்கலான விஷயங்களை கையில் எடுக்கக் கூடாது. மனக்குழப்பமான நேரத்தில் எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. புதிய முயற்சிகளை எடுக்க வேண்டாம். நாளை தள்ளி போடுங்கள். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். தெரியாத மூன்றாவது நபரிடம் எதுவும் பேசாதீங்க. குறிப்பாக எதிர்பாலின நட்பு உங்களுக்கு பிரச்சனையை கொடுத்து விடும்.

    துலாம்:

    துலாம் ராசிக்காரர்கள் இன்று சின்ன சின்ன தவறுகளை செய்து தப்பிக்க நினைப்பீர்கள். இதனாலேயே மனதில் பயம் இருக்கும். மேலதிகாரிகளிடம் பொய் சொல்லி ஏமாற்ற வாய்ப்புகள் உள்ளது. ஏமாற்றியவரிடமே சிக்கிக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதையாக இருங்கள். வேலைக்கு பர்மிஷன் போட்டுட்டு சினிமா பார்க்க எல்லாம் போகாதீங்க. ஜாக்கிரதையா இருந்துக்கோங்க.

    விருச்சிகம்:

    விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நிதிநிலைமை சீராக இருக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். தொழிலில் புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நீண்ட நாட்களாக வசூல் ஆகாத பணம் வசூல் ஆகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

    தனுசு:

    தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு மன நிறைவை கொடுக்கும். வீட்டில் இருந்த சின்ன சின்ன பிரச்சனைகளை எல்லாம் சரி செய்து விடுவீர்கள். மனைவியை சரி கட்டுவதற்கு இன்றைய நாள் சரியான நேரமாக இருக்கும். ஆமாங்க, ரொம்ப குடும்ப பிரச்சினை இருக்கு. மனைவி தொல்லை தாங்க முடியவில்லை என்பவர்கள் எல்லாம் இன்று மனைவியிடம் மனம் விட்டு பேசலாம் நல்லது நடக்கும்.

    மகரம்:

    மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனக்கவலை நிறைந்த நாளாக இருக்கும். சோகமாகவே இருப்பீங்க. வேலையில் சுறுசுறுப்பு இருக்காது. யார் என்ன சொன்னாலும் வாய்விட்டு சிரிக்க மாட்டீர்கள். கவலை நிறைந்த உங்கள் முகம் வாடியே கிடைக்கப் போகின்றது. உற்சாகத்தை வர வைத்துக் கொள்ள மனதிற்கு பிடித்த பாடலை கேட்கவும்.

    கும்பம்:

    கும்ப ராசிக்காரர்கள் இன்று எல்லா வேலையிலும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். சோம்பேறித்தனத்தை வைத்துக் கொள்ளக் கூடாது. ஒன்பது மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்றால், 8:45க்கே போயிருங்க. அதுதான் இன்னைக்கு உங்களுக்கு நல்லதை கொடுக்கும். பத்து நிமிடம் தாமதமானாலும், அந்த தாமதத்தால் நிறைய இழப்புகள் உண்டாகும் ஜாக்கிரதை.

    மீனம்:

    மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. எந்த ஒரு அலைச்சலும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானம் சீராகும். கடன் பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். சேமிப்பை அதிகப்படுத்த முயற்சி செய்வீர்கள். ஆனால் கையில் இருக்கும் பணம் செலவாகிக் கொண்டு தான் இருக்கும். மனைவியிடம் வாக்குவாதம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் கவனமாக இருந்துக்கோங்க.

    Leave A Comment