• Login / Register
  • ராசி பலன்கள்

    இந்த வாரம் எப்படி..? துலாம் - மீனம் ராசிகளுக்கான பலன்கள்!

    08/04/2024 முதல் 14/04/2024 வரையான இந்த வாரத்திற்கான துலாம் - மீனம் ராசிகளுக்கான ராசிபலன்.

    துலாம்:

    துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கடினமாக உழைக்க வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தடைப்பட்டு இருந்த சுப நிகழ்ச்சிகள் அனைத்தும் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாக்கும். ஒரு சிலருக்கு புதிய பொருட்கள் சேர்க்கை உண்டாகும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். வேலையில் கவனம் செலுத்தி செய்வதன் மூலம் பிரச்சினைகள் வராமல் பார்த்துக் கொள்ள முடியும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாக்கும். புதிதாக முதலீடு செய்வதற்கு முன்பு ஒரு முறைக்கு பலமுறை யோசித்து தக்க ஆலோசனை பெற்ற பிறகே முதலீடு செய்ய வேண்டும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பைரவரை வழிபட வேண்டும்.

    விருச்சிகம்:

    விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தைரியத்துடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படுவதில் சிரமங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். பிரிந்த உறவுகள் விரும்பி வந்து சேர்வர். திருமணம் முயற்சிகள் வெற்றியைத் தரும். பயணங்களில் கவனம் தேவை.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். எதிர்பாராத திடீர் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பது சற்று தாமதமாகும். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றியைத் தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பிகையை வழிபட வேண்டும்.

    தனுசு:

    தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கலவையான பலன்களை தரும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது. பணவரவை விட செலவுகள் அதிகமாகவே ஏற்படும். ஒரு சிலருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உள்ளது. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வீண் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பால் வேலையை சுலபமாக செய்து முடிப்பீர்கள். இருப்பினும் வேலையை பிறரிடம் ஒப்படைக்காமல் பார்த்துக் கொள்வது நன்மையை தரும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் ஏற்படும். தொழில் ரீதியாக பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.

    மகரம்:

    மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கம் நிறைந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஒரு சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாக இருக்கும். கூடுதல் பொறுப்புகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. ஒரு சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை உழைப்பிற்கேற்ற லாபமே கிடைக்கும். உடன் இருப்பவர்கள் சாதகமாக நடந்து கொள்வதன் மூலம் தொழிலில் லாபத்தை பெறுவதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

    கும்பம்:

    கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுமாரான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் வீண் விரயங்களால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். திருமண முயற்சிகள் வெற்றியைத் தரும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

    வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. திறமைக்கேற்ற பதவி உயர்வும் சம்பள உயர்வும் தேடி வரும். உடன் பணிபுரிபவர்களுடன் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாகவே இருக்கும். தொழிலை முன்னேற்றுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அனுமனை வழிபட வேண்டும்.

    மீனம்:

    மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சாதகமான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். அதேசமயம் தேவையற்ற செலவுகளும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. முடிந்த அளவிற்கு கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். பிறரிடம் பேசும் பொழுது பொறுமையை கடைப்பிடிப்பது அவசியம்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை கூடுதலாகவே இருக்கும். அதில் கூடுதல் கவனம் செலுத்தி செய்வதன் மூலம் பிரச்சினைகள் எதுவும் வராமல் பார்த்துக் கொள்ள முடியும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. தொழிலை முன்னேற்றுவதற்காக கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

    Leave A Comment