• Login / Register
  • செய்திகள்

    வாக்குச்சாவடியில் வரிசை நிலையை அறிந்துகொள்வது எப்படி?

    நாளை  நடைபெறவுள்ள மக்களவை தேர்தலையொட்டி, வாக்களிக்க உள்ளவர்கள், வாக்குச்சாவடியில் வரிசை நிலையை அறிந்துகொள்ளும் புதிய வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

    வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வருவதற்கு முன்பே https://erolls.tn.gov.in/Queue/ என்ற இணைப்பின் மூலம் இதனை அறிந்துகொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    மேலும், பொதுமக்கள் வசதிக்காக, பாகம் எண், வரிசை எண், வாக்குச்சாவடி அமைவிடம் உள்ளிட்டவை அடங்கிய பூத்சிலிப் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த பூத்சிலிப்பை கொண்டு யாரும் வாக்களிக்க இயலாது. சரியான பாகம், வரிசையை அறிந்து கொள்ள மட்டுமே. வாக்காளர்கள் அடையாள அட்டை அல்லது ஆதார் உள்ளிட்ட 11 ஆவணங்களை காட்டிதான் வாக்களிக்க முடியும்.

    பூத் சிலிப் தவிர, வாக்குச்சாவடி மையத்தில் உள்ள வாக்காளர் உதவி மையத்திலும் பாகம் எண், வரிசை எண் விவரங்களை அறியலாம். இதுதவிர, வாக்காளர் உதவி கைபேசி செயலியான ‘voters helpline app’ வாயிலாக இ-எபிக் அல்லது, பாகம், வரிசை எண் உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம், வாக்குச்சாவடி மையத்தில், நாம் எந்த வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்த வேண்டும் என்பதை சரியாக அறிந்து கொள்ள முடியும்.

    மேலும், வாக்குப்பதிவு நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து பணியாளர்கள், தொழிலாளர் நலத்துறையின் கட்டுப்பாட்டறைகளை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அல்லது தேர்தல் துறையின் 1950 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.



    Leave A Comment