• Login / Register
  • செய்திகள்

    சோகமாக இருந்தால் 10 நாள் விடுமுறை: சீன நிறுவனத்தின் சுவாரஷ்ய அறிவிப்பு

    சீனாவை சேர்த்த நிறுவனம் ஒன்று ஊழியர்கள் சோகமாக இருக்கும் சந்தர்ப்பத்தில் வருடாந்த விடுமுறையை விட கூடுதலாக 10 நாள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

    சீனாவைச் சேர்ந்த சூப்பர் மார்க்கெட் நிறுவனமான `Fat Dong Lai' தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இவ்வாறானதொரு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.

    இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கு ஏழு மணிநேரம் வேலை நேரமாகும். மேலும், 30 முதல் 40 நாள்கள் வரை வருடாந்திர விடுப்பு வழங்கப்படுகிறது. சீன புத்தாண்டு காலத்தில் இந்நிறுவனம் ஐந்து நாள்களுக்கு மேல் மூடப்படுவதால் அப்போதும் ஊழியர்களுக்கு விடுமுறை தான்.

    இந்த நிறுவனத்தின் ஊழியர்களின் சராசரி மாதச் சம்பளம் 7,000 யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 80,878) ஆகும்.

    "எல்லோருக்கும் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லாத நாட்கள் உள்ளன, எனவே நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால், வேலைக்கு வர வேண்டாம். இந்த மாற்றத்தின் மூலம், ஊழியர்கள் தங்களுடைய ஓய்வு நேரத்தை தீர்மானிக்க சுதந்திரமாக இருப்பார்கள். இந்த விடுப்பை நிர்வாகத்தால் மறுக்க முடியாது" என்று நிறுவனர் யூ டோங் லாய் கூறியுள்ளார்.




    Leave A Comment