• Login / Register
  • செய்திகள்

    இலங்கையில் இன்று முதல் E-Visa முறை!

    இலங்கையில் இன்று புதன்கிழமை (17) முதல் புதிய விசா முறை மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணியை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நடைமுறைப்படுத்தவுள்ளது.

    "புதிய விசா நடைமுறைகள், அதற்கான கட்டணங்கள், பூர்த்தி செய்யவேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்க முடியுமான காலப் பிரிவு என்பன இலக்கம் 2360/24 மற்றும் 2023.11.27 ஆம் திகதி விசேட வர்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

    தற்போது நடைமுறையிலுள்ள ETA (Electronic Travel Authorization) முறைக்குப் பதிலாக அறிமுகம் செய்யப்படும் இணைய வழிமுறையான E-Visa முறைமை GBS Technology Service & IVS Global நிறுவனத்துடன் இணைந்து செயற்படுத்துவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதோடு அந்த இணையத்தளத்தின் தொடர்பு கீழே தரப்பட்டுள்ளது.

    www.srilankaevisa.lk 

    வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களை கவரும் வகையில், புதிய இணைய வழிமுறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் விரைவான மற்றும் திறமையான விசா விண்ணப்ப செயல்முறையை வழங்க உத்தேசித்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

    Leave A Comment