• Login / Register
  • செய்திகள்

    புதுச்சேரியில் 144 தடை உத்தரவு !

    புதுச்சேரியில் இன்று (17) மாலை 6 மணி முதல் 20 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியரும் தோ்தல் நடத்தும் அதிகாரி அ.குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.

    மக்களவைத் தேர்தலையொட்டி குறித்த  144 தடை உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு வரும் வெள்ளிக்கிழமை(19) காலை 7.30 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் நடைபெறுகிறது. இதையொட்டி, புதன்கிழமை (17) மாலையுடன் பிரசாரம் நிறைவடைகிறது.

    தொகுதிக்கு சம்பந்தமில்லாதவா்கள் பிரசாரத்துக்கு வந்திருந்தால் உடனடியாக வெளியேற வேண்டும். மண்டபங்கள், விடுதிகளில் தங்கியிருப்போரைக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தேர்தலையொட்டி புதுச்சேரியில் புதன்கழமை(ஏப்.17) மாலை 6 மணி முதல் 20 ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாக்களிக்க வருவோருக்கு அது பொருந்தாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Leave A Comment