• Login / Register
  • செய்திகள்

    ஊழல் குற்றச்சாட்டு; சிங்கப்பூர் பிரதமர் திடீர் இராஜினாமா!

    சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் அடுத்த மாதம் 15ஆம் திகதி பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார்.

    அவர் பொதுச் செயலாளராக பதவி வகிக்கும் மக்னள் செயல் கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பதவி விலகல் முடிவை அறிவித்துள்ளார்.

    சிங்கப்பூரின் 3வது பிரதமரான இவர், 2004 முதல் மக்கள் செயல் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார்.

    சிங்கப்பூரில் பிரதமர் லீ சியன் லூங் தலைமையிலான மக்கள் செயல் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    இக்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது அண்மைக்காலமாக ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

    இதன் காரணமாக 02 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா செய்துள்ளனர்.

    இந்நிலையில் பிரதமர் லீ சியென் லூங்கும் அடுத்த மாதம் மே 15ஆம் திகதி பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார்.

    லாரன்ஸ் வோங் பதவி விலகும் அன்றே புதிய பிரதமராக பதவியேற்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Leave A Comment