• Login / Register
  • செய்திகள்

    நெல்லை தொகுதிக்கான தேர்தல் ரத்து?!: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

    திருநெல்வேலி தொகுதிக்கான தேர்தலை இடைநிறுத்திவைக்க கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்  ஒருவர்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

    திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளரான நயினார் நாகேந்திரனின் மீதுள்ள வன்கொடுமைத் தடை சட்ட வழக்கு விவரங்கள் வேட்பு மனுவில் மறைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்ததை அடுத்து, இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் வரை திருநெல்வேலி தொகுதியில் தேர்தல் நடத்தத் தடை விதிக்க வேண்டும் என்று அவர் வழக்கு தொடுத்துள்ளார்.

    மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞரான மகாராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என்று தாம்  ஆட்சேபணை தெரிவித்ததாக கூறியுள்ளார். அந்த மனு மீது விசாரணை நடத்தி முடிவெடுக்கும் வரை, அந்த தொகுதிக்கு தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார்.

    நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனின் வேட்பு மனுவில் வன்கொடுமை தடைச் சட்ட பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்த விபரங்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரரான மகாராஜன் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை ஏற்றுக் கொண்டது சட்டவிரோதம் எனவும், தனது ஆட்சேபம் மீது விசாரணை நடத்தி முடிவெடுக்கும் வரை திருநெல்வேலி தொகுதிக்கு தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என்றும் அவரது வேட்புமனுவை ஏற்றுக் கொண்ட உத்தரவை மறுபரிசீலனை செய்வதுடன், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த மனு, தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. ஏற்கனவே  4 கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கப்பணம் தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு ரயில் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கையில்  நயினார் நாகேந்திரனின் பெயர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவரின் வேட்புமனுவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளதால் நெல்லை தொகுதியில் தேர்தல் ரத்தாகுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.



    Leave A Comment