• Login / Register
  • செய்திகள்

    சிதம்பரத்தில் ஐ.டி.ரெய்டு; திருமாவளவனை வெற்றி பெறவைக்க பாஜக முயற்சி?

    நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள திருமாவளன் தங்யிருந்த வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியன் பின்னணியில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனை வெற்றி பெறவைக்கும் பாஜக-வின் திட்டம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

    சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சிதம்பரம் நடேசன் நகரில் அக் கட்சி நிர்வாகி முருகானந்தம் வீட்டில் தங்கி பரப்புரை செய்து வருகிறார்.

    இந்நிலையில் அவர் தங்கி இருந்த வீட்டிற்கு ஏழு பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று (10) காலை சென்று சோதனை மேற்கொண்டனர்.

    வீட்டின் உள்ளே இருந்த பத்திரிகைகள் மற்றும் ஆடைகளை கலைத்து சோதனை மேற்கொண்ட நிலையில் எந்த ஒரு ஆவணமும், பணமும் சிக்காத நிலையில் திரும்பிச் சென்றனர்.

    வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

    இந்நிலையில் இந்த சோதனை குறித்து பேட்டியளித்த விசிக தலைவர் திருமாவளவன், இது வெளிப்படையான அச்சுறுத்தல் எனவும் உளவியல் அடிப்படையிலான தாக்குதல் எனவும் குற்றஞ்சாட்டினார்.

    இது போன்ற அச்சுறுத்தல்கள் தனது பயணத்தை ஒருபோதும் தடை செய்யாது எனவும் திருமாவளவன் தெரிவித்தார்.

    இதேவேளை, சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனை வெற்றிப்பெற வைக்க பாஜக முயற்சி செய்து வருவதாக அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த தடா பெரியசாமி அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment