• Login / Register
  • மேலும்

    தொடர்ந்து அதிகரிக்கும் தங்கத்தின் விலை: அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்

    தங்கம் விலை தொடர்ந்து  அதிகரித்துவரும் நிலையில், இன்றும் ரூ.280 உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 80 உயர்ந்து ரூ.53,360-க்கும், ஒரு கிராம் ரூ. 6,670-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

    இந்த நிலையில், சென்னையில் புதன்கிழமை தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.54,640-க்கும், ஒரு கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ. 6,705-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    அதேபோல், வெள்ளி கிராமுக்கு ரூ. 1 உயர்ந்து ரூ.89-க்கும், ஒரு கிலோ ரூ.89,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    Leave A Comment