• Login / Register
  • மேலும்

    கழுத்தை சுற்றி கருமை படர்ந்துள்ளதா: தீர்வுகள் இதோ


    கழுத்துப் பகுதியைச் சுற்றி கருமையாக இருப்பது பலரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை, இதற்கு பல தீர்வுகள் சொல்லப்படுகின்றன அவற்றில் சிவற்றினை இங்கு பார்க்கலாம்.

    குறிப்பாக டீன் ஏஜ் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இது போல கண்டிப்பாக நிறைய பேருக்கு இருக்கும். அது மட்டுமல்லாமல் திருமணமான பெண்கள் கழுத்தில் அதிக கனமுள்ள நகைகளை அணியும் பொழுதும் இது போல கருமை தோன்ற ஆரம்பிக்கும். பெண்கள் மற்றும் ஆண்கள் பல பேருக்கு கழுத்து கருமை பிரச்சனை அதிகம் இருக்கும். 

    • கழுத்துப் பகுதியில் உள்ள கருமையை போக்குவதற்கு சிறந்த தீர்வு எலுமிச்சை சாறு. குளிப்பதற்கு முன்பாக சிறிதளவு எலுமிச்சைச் சாறு துளிகளை கழுத்துப் பகுதியில் நன்றாக தடவி மசாஜ் செய்துவிட்டு 15 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும். வாரம் இருமுறை செய்யலாம். 

    • கழுத்தில் தயிரை தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவ வேண்டும். பின்பு மஞ்சள், தேன் கலந்து கழுத்தில் தடவி 5 நிமிடம் கழித்து கழுவி விட்டு பாசிப்பயிறு, தயிர் சிறிது கலந்து கழுத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

    • அதுபோல பாசிப்பயறு மா கருமையைப் போக்கி சருமம் பளபளப்பு அடைய வைக்கும் சிறந்த பொருள். பாசிப்பயறு மாவை குளிக்கும்போது தொடர்ந்து பயன்படுத்தி வர கருமை நீங்கும். 

    • அதுபோல, ஓட்ஸுடன் சிறிது தயிர் சேர்த்து பெக் போன்று கழுத்துப் பகுதியில் போட்டு வரவும். இதுவும்  சிறந்த தீர்வாக இருக்கும். 

    • உருளைக்கிழங்கு சாறு அல்லது உருளைக்கிழங்கு பேஸ்டையும் பயன்படுத்தலாம். 

    • தக்காளியை ஒரு துண்டு எடுத்துக்கொண்டு சிறிது சீனி சேர்த்து ஸ்க்ரப் செய்யலாம். 

    • பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் - இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தேய்த்து வந்தால் படிப்படியாக கருமை நிறம் மறையும்.

    • முட்டைக்கோஸை அரைத்து அந்த சாறையும் கருப்பாக நிறம் மாறிய கழுத்தில் தேய்க்கலாம். இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்ப்பது கழுத்து கருமையை போக்குவதோடு மினுமினுப்பையும் தரும்.

    • கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு - இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு கழுவிக் கொள்ளவும்.






    Leave A Comment