• Login / Register
  • சினிமா

    விஜய் சேதுபதி படத்தின் இசையமைப்பாளராக பிரபல இயக்குனர்!


    மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் துவங்கி நடைபெற்று வருவகிறது.

    நடிகர் விஜய் சேதுபதி - மிஷ்கின் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ‘ட்ரெயின்' (வசயin) எனப் பெயரிட்டுள்ளனர். கலைப்புலி எஸ். தாணு இப்படத்தைத் தயாரிக்கிறார்.

    ட்ரெயின் படத்தின் நாயகியாக டிம்பிள் ஹயாதியும் முக்கிய கதாபாத்திரங்களில் ஈரா தயானந்த், நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ் , பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

    இப்படத்திற்கு இயக்குனர் மிஸ்கின் இசையமைத்துவருகிறார்.இந்தப் படத்துக்காக ஒரு பாடலையும் பாடியுள்ளார் மிஷ்கின். இது மிஷ்கின் இசையமைக்கும் 2ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இசை மீது அதீத ஆர்வம் கொண்ட மிஷ்கின், சமீபத்தில் இசை பயிற்சியும் எடுத்துக்கொண்டார். டெவில் படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.


    Leave A Comment