• Login / Register
  • ராசி பலன்கள்

    இன்றைய நாள் எப்படி? 26 மார்ச் 2024!

    செவ்வாய்கிழமை

    26 - 03 – 2024

    சோபகிருது ஆண்டு – பங்குனி - 13 ஆம் தேதி

    மேஷம்:

    மேஷ ராசிக்காரர்கள் இன்று சந்தோஷமாக இருக்கப் போகிறீர்கள். நீங்கள் நினைத்த நல்லது எல்லாம் உங்கள் வாழ்க்கையில் நடக்கும். நீண்ட நாள் பிரிந்த நண்பர்கள் உறவுகளை சந்திக்க வாய்ப்புகள் உள்ளது. காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். சுப செலவுகள் உண்டாகும். வீட்டில் இருந்து வந்த கஷ்டங்கள் விலகும். நிதி நிலைமை உயரும்.

    ரிஷபம்:

    ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பரபரப்பான நாளாக இருக்கப் போகின்றது. அதிரபுதிரியாக இந்த நாளை தொடங்குவீர்கள். எல்லா விஷயத்திலும் அவசரம் இருக்கும். எல்லா விஷயத்திலும் பிரஷர் இருக்கும். ஆகவே இன்றைய நாள் ஒரு மணி நேரம், ஒரு நிமிடம் போல ஓடிவிடும். இன்று மாலை வீட்டிற்கு செல்லும் போது நொந்து நூடுல்ஸ் ஆகி இருக்கப் போறீங்க. கவலைப்படாதீங்க வீட்டில் சந்தோஷமான அன்பான மனைவி உங்களுக்காக காத்துகிட்டு இருப்பாங்க. குடும்பத்திலங சந்தோஷம் இருக்க போகிறது.

    மிதுனம்:

    மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் பொறுப்பு இருக்க வேண்டும். வழக்கத்தை விட இன்றைய நாளை நீங்கள் சீக்கிரமே தொடங்க வேண்டும். தாமதமாக இன்றைய நாள் தொடங்கினால், பிறகு எல்லா வேலையிலும் பின்னடைவு ஏற்பட்டு விடும். மேலதிகாரிகளிடம் திட்டு வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அலட்சியத்தோடு எந்த ஒரு வேலையையும் செய்யாதீங்க. கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் வரும். குடும்ப உறவுகளோடு பேசும்போது கவனம் இருக்கட்டும்.

    கடகம்:

    கடக ராசிக்காரர்களுக்கு என்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வேலை செய்யும் இடத்தில் முன்னுக்கு வருவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்கும். சந்தோஷம் நிறைவாக இருக்கும். கோவில் குளங்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் அமையும். முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும்.

    சிம்மம்:

    சிம்ம ராசிக்காரர்கள் இன்று மனசோர்வோடு காணப்படுவீர்கள். பேச்சில் விரக்தி தெரியும். எந்த ஒரு வேலையிலும் அதிக ஆர்வம் இருக்காது. இதனால் வேலையில் பின்னடைவு உண்டாகும். தொழிலிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியாது. எல்லா விஷயத்தையும் நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளி போட்டு விடுவீர்கள்‌. இஷ்ட தெய்வ வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.

    கன்னி:

    கன்னி ராசிக்காரர்கள் இன்று அவசர அவசரமா யோசிச்சு தப்பு தப்பா எல்லா வேலையும் செய்யப் போறீங்க. உங்களுக்கு இன்று பொறுமை அவசியம் தேவை. வேகம் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு விவேகமும் முக்கியம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். முக்கியமான முடிவுகளை எடுக்க நாளை தள்ளிப் போடுங்கள். எந்த விஷயத்திற்கும் அடம் பிடிக்காதீங்க. பெரியவர்கள் பேச்சுக்கு மரியாதை கொடுத்த நடக்கவும். எனக்குத் தான் எல்லாம் தெரியும் என்று அலட்டிக் கொள்ளக் கூடாது.

    துலாம்:

    துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சோர்வு நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. எந்த வேலையிலும் ஆர்வம் இருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். வியாபாரத்தில் முதலீட்டின் போது கவனம் செலுத்த வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனையில் கவனம் செலுத்துங்கள். மூன்றாவது நபரை கண்மூடித்தனமாக நம்பாதீங்க.

    விருச்சிகம்:

    விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். மன மகிழ்ச்சியோடு உங்களுடைய வேலையை செய்யத் தொடங்குவீர்கள். முதலீட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலை விரிவு படுத்தலாம். கமிஷன் தொழில் லாபத்தை கொடுக்கும். நீண்ட தூர பயணத்தின் மூலம் நன்மை நடக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை பெறுவீர்கள்.

    தனுசு:

    தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்துக் கொண்டிருக்கிறது. நீண்ட நாட்களாக வராத கடன் தொகை வசூல் ஆகும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மன மகிழ்ச்சி அடைவீர்கள். சொத்து சேர்க்கைக்கு உண்டான நிறைய வாய்ப்புகள் உங்களுக்கு இன்று கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு நன்மையை செய்யும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

    மகரம்:

    மகர ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீகத்தில் மனது ஈடுபடும். கோவில் குளங்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். நிறைய தண்ணீர் குடியுங்கள். நேரத்திற்கு ஆரோக்கியமான உணவை மட்டும் சாப்பிடுங்கள்.

    கும்பம்:

    கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக தான் இருக்கும். கோபம் இருக்கக்கூடிய இடத்தில் தான் குணம் இருக்கும் என்று சொல்லுவார்கள். உங்களைப் பற்றிய நல்ல விஷயங்களை அடுத்தவர்கள் இன்று புரிந்து கொள்வார்கள். முன்கோபத்தை குறைத்து நிதானமாக நடந்து கொண்டால், வாழ்க்கையில் நீங்கள் இன்னும் பெரிய அளவில் சாதிக்கலாம். உறவுகளுக்கு மதிப்பு கொடுத்து நடக்க வேண்டும். மனைவியிடம் சண்டை போடக்கூடாது.

    மீனம்:

    மீன ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் கவனத்தோடு இருக்கவும். ஏதாவது ஒரு விஷயத்தை மறந்து போவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்களுடைய பொருட்களை பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நீண்ட தூர பயணம் செய்தால் பயணத்தின் போதும் கவனம் இருக்க வேண்டும். கைபேசி, ஹெட் போன், கிரெடிட் கார்டு, ஏடிஎம் கார்டு இவைகளை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்.

    Leave A Comment