• Login / Register
  • செய்திகள்

    ஒமைக்ரோன் திரிபு ஆபத்தா...? கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை - மா.சுப்பிரமணியன்!

    தமிழ்நாடு உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் உருமாறிய கொரோனா மீண்டும் வேகமாக பரவிவரும் நிலையில் கொரோனா தடுப்பூசி கையிருப்பில் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் தினசரி தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கோவை, மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், வரும் 10 மற்றும் 11 ஆம் தேதியில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை ஒத்திகை நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

    தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி அதிக அளவில் போடப்பட்டுள்ளதால், நோய் எதிர்பாற்றல் அதிகரித்திருக்கும் எனவே, உருமாறிய கொரோனாவினால் உயிரிழப்பு போன்ற பெரிய அளவிலான பாதிப்புகள் இருக்காது என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    மேலும் கொரோனா தடுப்பூசி வழங்குவதை மத்திய அரசு நிறுத்திவிட்டதால், தற்போது கையிருப்பு இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  தெரிவித்துள்ளார்.

    Leave A Comment