• Login / Register
  • செய்திகள்

    எதிர்வரும் 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 27ஆம் தேதி வரை  மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது.

    வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரில் மழை தொடரும். வரும் 27ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 
    தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.


    Leave A Comment