• Login / Register
  • செய்திகள்

    தன்பால் ஈர்ப்பாளர்கள் திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய முதல் தெற்காசிய நாடு!

    தாயலாந்து  நாடாளுமன்றம் தன்பால் ஈர்ப்பாளர்கள் திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

    தாய்லாந்து நாடாளுமன்றத்தின் கீழவையில், இன்று  தன்பால் ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் சமத்துவ திருமணத்துக்கான மசோதா, பெரும்பான்மையுடன் நிறைவேறியுள்ளது. ஒரே பாலினத்தை சேர்ந்தவர்களின் திருமணத்தை அங்கீகரிக்கும் இந்த மசோதாவை நிறைவேற்றும் முதல் தெற்காசிய நாடு, தாய்லாந்து.

    தாய்லாந்தின் 415 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 400 பேர் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

    இந்த மசோதா, சிவில் மற்றும் வணிக குறியீடுகளில் ”ஆண் மற்றும் பெண்” என்கிற வார்த்தைகளை “தனிநபர்கள்” என்றும் “கணவன் மற்றும் மனைவி” என்கிற பதங்களை “மணம் புரிந்த இணையர்கள்” என்றும் திருத்தவுள்ளது.

    நிறைவேற்றப்பட்ட மசோதா செனட் அவைக்கும் அதன் பிறகு ராஜ்ய ஒப்புதலுக்கு மன்னருக்கும் அனுப்பப்படும்.

    ஆசியாவில் தைவான், நேபாளம் நாடுகளுக்கு அடுத்து மூன்றாவது நாடாக தாய்லாந்து இந்த மசோதாவைக் கொண்டு வந்துள்ளது.

    Leave A Comment