• Login / Register
  • மேலும்

    ரூ.1,120 உயர்ந்து உச்சத்தை தோட்ட தங்கத்தின் விலை!


    கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்துள்ளது. 

    வெள்ளிக்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 உயா்ந்து புதிய உச்சமாக ரூ.51,120-க்கு விற்பனையாகிறது.

    ஒரு கிராம் தங்கம் விலை நேற்று ரூ.6,250க்கு விற்பனையான நிலையில், இன்று 140 ரூபாய் உயர்ந்து ரூ.6,390க்கு விற்பனையாகிறது.

    கடந்த திங்கள்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.49,640-க்கு விற்பனையானது. செவ்வாய்க்கிழமை சற்று குறைந்து ஒரு சவரன் ரூ. 49,600-க்கு விற்பனையானது. புதன்கிழமை கிராமுக்கு ரூ.15 உயா்ந்து ரூ. 6,215-க்கும், சவரனுக்கு ரூ.120 உயா்ந்து ரூ. 49,720-க்கும் விற்பனையானது. வியாழக்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயா்ந்து ரூ. 50,000-க்கு விற்பனையானது. இன்று புதிய உச்சமாக ரூ.51,120 ஐ தொட்டுள்ளது.



    Leave A Comment