• Login / Register
  • சினிமா

    "ஆர்ஆர்ஆர்" திரைப்பட நடிகர் காலமானார்!

    "ஆர்ஆர்ஆர்" திரைப்படத்தில் நடித்த நடிகர் ரே ஸ்டீவன்சன் காலமானார்.

    ‘ஆர்ஆர்ஆர்’படத்தில் வரும் 'சர் ஸ்காட்' என்ற ஆங்கிலேயர் கேரக்டரில் நடித்தவர் நடிகர் ரே ஸ்டீவன்சன். 'ஆர்ஆர்ஆர்' படத்தில் ஸ்டீவன்சன் ஏற்று நடித்திருந்த எதிர்மறையான பாத்திரமும், அவரின் நடிப்பும் வரவேற்பைப் பெற்றது. மார்வெலின் 'தோர்', பிரபல வெப் சீரிஸான 'வைக்கிங்ஸ்' போன்றவற்றிலும் நடித்துள்ளார்.

     வடக்கு அயர்லாதை சேர்ந்த  ஸ்டீவன்சன், உடல்நலக்குறைவால் அவர் இத்தாலியில் நேற்று காலமானார்.  அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள 'ஆர்ஆர்ஆர்' படக் குழு, "அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் செய்தி,  ரே ஸ்டீவன்சன், நிம்மதியாக ஓய்வெடுங்கள். நீங்கள் எங்கள் இதயங்களில் SIR SCOTT-ஆக என்றென்றும் இருப்பீர்கள்" என்று பதிவிட்டுள்ளது.

    Leave A Comment