• Login / Register
  • விளையாட்டு

    IPL-2023: CSK-ஐ வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த குஜராத்!

    ஐபிஎல் 2023 தொடரின் முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐ வீழ்த்தி குஜராத் அணி முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

    16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று அகமாதபாத் நரேந்திர மோடி மைதானத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் கோலகலமாக தொடங்கியது.

    டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹார்திக் பாண்டிய முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ஓட்டங்களை பெற்றுள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் அதிரடியாக விளையாடி ருத்ருவாஜ் கெய்க்வாட் 50 பந்துகளில் 92 ரன்களை விரட்டி ஆட்டமிழந்தார். ஒன்பது 6 ஓட்டங்களும், நான்கு 4 ஓட்டங்களையும் விளாசியிருந்தார்.

    மொயின் அலி - 23, சிவம் - 19, ராயுடு 12 ரன்களை பெற்று ஆட்டமிழந்திருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெவோன் கான்வே-1, பென் ஸ்டோக்ஸ்-7, ஜடேஜா-1 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றறினர்.

    இறுதியாக களமிறங்கிய 'தல' தோனி பிரமாண்டஒரு சிக்ஸருடன் 13 ரன்களுடன் ஆட்டமிழக்காது இருந்தார்.

    பந்து வீச்சில் முகமட் சமி, ரஷீட் கான், ஜோசெப் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

    179 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணிக்கு ஆரம்ப ஜோடியாக களமிறங்கிய சாஹா - சுப்மன் கில் அதிரடியாக ஆடி வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

    அதிரடியாக விளையாடிய சாஹா 16 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

    அதிரடியாக விளையாடிய சுப்மன் கில் 36 பந்துகளில் 3 சிக்சர்கள் 6 பவுண்டர்கள் என 63 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

    இறுதியில் குஜராத் அணி  19.2 ஓவர்களில்  182 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் தொடரில் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

    இந்திய அணிக்காக சகல வகையிலான சர்வதேச போட்டிகளிலும் இருந்து ஓய்வுபெற்றுள்ள மகேந்திரசிங் ஐபிஎல் தொடரில் மட்டுமே ஆடிவருகிறார். பெரும்பாலும் இந்த தொடருடன் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் இந்த தொடரை வென்று வெற்றியுடன் தோனியை வழியனுப்பி வைக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முனைப்போடு களமிறங்கிய நிலையில் முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ளமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் 'தல' தோனி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Leave A Comment