• Login / Register
  • செய்திகள்

    அதிமுக-வுடன் இணைய தயார் - திருமாவளவன் பரபரப்பு பேட்டி!

    மக்கள் நலன் சார்ந்த விடயங்களுக்காக அதிமுக-வுடனும் இணைய தயாராக உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார்.

    திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நீடித்து வந்தாலும் அண்மையில் பல்வேறு விடங்களில் திமுக அரசின் முடிவுகளுக்கு எதிராகவே செயற்பட்டு வருகிறது.

    விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் கள்ளச்சாரயத்திற்கு 20 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    தஞ்சாவூரில் அரசு மதுபான கடையில் மது அருந்திய இருவர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

    இச்சம்பவங்கள் தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் திமுக அரசு மீது கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

    இவ்வாறான நிலையில் பூரண மதுவிலக்கு கோரி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடததப்போவதாக தொல் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

    மதுரை சிந்தாமணியில் உள்ள தனியார் ஓட்டலில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்த போது இதனைத் தெரிவத்தார்.

    இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

    பூரண மதுவிலக்கு என்பது தான் விசிகவின் நிலைப்பாடு. திமுக தேர்தல் அறிக்கையிலும் அதை சொல்லியுள்ளது.

    இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஜூன் இரண்டாவது வாரத்தில் தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி அறப்போராட்டம் நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி திட்டமிட்டுள்ளது.

    தேர்தல் கூட்டணி என்பது வேறு. மக்கள் நலன் சார்ந்த போராட்ட களம் வேறு. மக்கள் நலனுக்காக ஆளும் கட்சிக்கு எதிரான இயக்கங்களுடன் இணைந்து போராடுவோம்.

    தேர்தல் உறவை பொறுத்த வரை திமுக, காங்கிரஸ் உடனான கூட்டணி தொடர்கிறது.

    மதுவிலக்கு தொடர்பாக அதிமுக போராட்டம் நடத்தினால், அவர்களுடன் இணைய தயார்.

    ஜூன் இரண்டாம் வாரம் விசிக நடத்துவது, எங்களுடைய தனிப்பட்ட போராட்டம்’ என்று தெரிவித்தார்.

    Leave A Comment