• Login / Register
  • சினிமா

    உக்ரைன் கொடி, சிவப்பு திரவம்; கேன்ஸ் திரைப்பட விழாவில் பரபரப்பு

    75-வது கேனஸ் திரைப்பட விழா பிரான்ஸில் நடைபெற்றது. இவவிழாவில் சிவப்பு நிற திரவத்தை ஊற்றிக்கொண்டு கோஷம் எழுப்பியபடி உக்ரைன் கொடி நிற உடை அணிந்து வந்த பெண்ணால் பரப்பரப்பு ஏற்பட்டது.

    இந்த விழாவில் நேற்றிரவு உக்ரைனின் கொடி நிறத்தில் (மஞ்சள் - நீலம்) ஆடை அணிந்து வந்த பெண் ஒருவர் திடீரென சிவ நிற திரவத்தை உடலில் ஊற்றி கோஷமிட்டார். அவர் ஆடை முழுவதும் ரத்தக் கறை படித்ததுபோல் ஆனது. இதனைத் தொடர்ந்து அவரை நிகழ்விடத்தில் இருந்து உடனடியாக பாதுகாவலர்கள் வெளியேற்றினர். 

    உக்ரைனில் நிலவும் சூழலை உலக நாடுகளுக்கு காண்பிக்கவே இந்தச் செயலை செய்ததாக அப்பெண் தரப்பில் கூறப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் பெண் ஒருவர் ரஷ்யாவுக்கு எதிராக குரல் கொடுத்தார்.

    முன்னதாக, கேனஸ் திரைப்பட விழா தொடக்கத்தில் உக்ரைனுக்கு தாங்கள் துணை நிற்பதாக அதன் நிர்வாக இயக்குநர் ஃபிமெக்ஸ் கூறியிருந்தார். 

    உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்ய அரசுடன் தொடர்புடைய ரஷ்ய பிரதிநிதிகள் மற்றும் திரைப்பட நிறுவனங்கள் மீது கடந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment