• Login / Register
  • சினிமா

    ‘அரபிக் குத்து’ பீஸ்ட் திரைப்படத்தின் முதல் பாடல் காதலர் தினத்தன்று வெளியாகிறது

    நடிகர் விஜய் ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பின் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையமைத்துள்ள பீஸ்ட் திரைப்படம் நடிகர் விஜய்யின் 65ஆவது படமாகும்.

    இந்த பீஸ்ட் ,படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன்,  யோகி பாபு உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் நடித்துள்ளனர்.

    தற்போது, பீஸ்ட் திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் இன்று வெளியிட்டது.

    ‘அரபிக் குத்து’ எனத் துவங்கும் இந்தப் பாடலின்  ப்ரமோ  வீடியோவை தயாரிப்பு நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    இப் பாடலை நடிகர் சிவகார்த்திக்கேயன் எழுதியுள்ளார். அனிருத்  இசையமைத்து, பாடியுள்ளார்.

    Arabic kuththu beast first single song promo video :  thalapathy vijay
     

    அரபிக் குத்து முழுப் பாடல் வருகின்ற பிப்ரவரி 14ஆம் தேதியன்று , விஜய் ரசிகர்களுக்கு காதலர் தினப் பரிசாக வெளியாகவுள்ளது.

    இசையமைப்பாளர் அனிருத், நடிகர் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான முந்தைய பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

     

    Leave A Comment