திருமண யோகம் முதல் குழந்தை பாக்கியம் வரை... தட்சிணாமூர்த்தி வழிபாடு!
தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் பற்றியும், தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டிய முறைகள், பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.
தட்சிணாமூர்த்தியை வழிபட குரு கிரகத்தினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். கல்வி, கேள்வி, ஞானம், புதிய- அரிய கலைகளில் தேர்ச்சி பெறலாம்.திருமண யோகம் முதல் குழந்தை பாக்கியம் வரை அனைத்து நல்லது பெற தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள்.
புகழையும் பொருளையும் ஒருசேர அடைய தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறந்தது. தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி சில தலங்களில் திசைமாறியும் எழுந்தருளியுள்ளார். திசைமாறியும், வித்தியாசமான திருக்கோலத்திலும் தட்சிணாமூர்த்தியை வழிபட நினைத்த நல்ல காரியங்கள் உடனே நிறைவேறும் என்றும் அனுபவத்துடன் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டிய நாள் ஆகும். அன்று காலை முதல் மாலை வரை தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்யாலாம். ஆனால் தட்சிணாமூர்த்தியை காலையில் வழிபடுவது மேலும் சிறப்பை தரும். அத்தோடு தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை மாலை அணிவித்து விரதம் இருந்து பூஜை செய்து வழிபடலாம் என்று புதுக்கோட்டை மாவட்ட குருக்கள் தெரிவித்தார்.
Leave A Comment