செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்!
வரலாற்றுச்சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று புதன்கிழமை(16) மாலை மூன்று மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.
ஓகஸ்ட் 25ம் திகதி காலை 9 மணிக்கு பூங்காவனமும், ஓகஸ்ட் 26ம் திகதி கைலாச வாகனமும், ஓகஸ்ட் 29ம் திகதி சப்பறத் திருவிழாவும், ஓகஸ்ட் 30ம் திகதி காலை 8 மணிக்கு தேர் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
ஓகஸ்ட் 31ம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும் அன்று மாலை 5 மணிக்கு மௌனத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
இதேவேளை, பக்தர்களின் வசதிகருதி விசேட போக்குவரத்து, பாதுகாப்பு, சுகாதார வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
உற்சவகாலங்களில் ஆலய சூழலில் உள்ள அன்னதானம் இடம்பெறவுள்ளது.
Leave A Comment