• Login / Register
  • ஆன்மிகம்

    பாப்பரசருக்கு குடல் அறுவை சிகிச்சை; வத்திகான் தகவல்

    போப் ஆண்டவர் பிரான்சிஸுக்கு புதன்கிழமை குடல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    86 வயதாகும் போப் பிரான்ஸுக்கு ஏற்கெனவே கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதம் குடல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

    அவரது பெருங்குடல் சுருங்கியதால் ஏற்பட்ட தொற்றின் காரணமாக, அந்த அறுவைச் சிகிச்சையின்போது 33 செ.மீ. பெருங்குடல் நீக்கப்பட்டது. அப்போது அவா் 10 நாள்கள் மருத்துவமனையில் இருந்தாா்.

    தற்போது மீண்டும் குடல் பகுதி அடிக்கடி சுருங்கி வலி ஏற்படுவதால் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக வாட்டிகன் வட்டாரங்கள் தெரிவித்தன.

    அறுவை சிகிச்சைக்காக அவா் நீண்ட நேரம் மயக்க நிலையில் இருக்கும்போதும் அவரது கத்தோலிக்க தலைமைப் பொறுப்பு தொடரும் என்று வத்திகான்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Leave A Comment