• Login / Register
  • ஆன்மிகம்

    கருங்கண்ணி புனித அந்தோணியார் ஆலய ஆண்டுப்பெருவிழா ஆரம்பம்!

    திருப்பூண்டியை அடுத்த கருங்கண்ணி புனித அந்தோணியார் ஆலய ஆண்டுப்பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 

    முன்னதாக அந்தோணியார் சொருபத்துடன் அலங்கரிக்கப்பட்ட கொடி, ஆலய வளாகத்தில் இருந்து தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. 

    பின்னர் ஆலய பங்குதந்தை டேவிட் செல்வகுமார் சிறப்பு திருப்பலி செய்து வைத்தார். தொடர்ந்து கொடி புனிதம் செய்யப்பட்டு, கோவிலின் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. 

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சிறப்பு அலங்கார பெரிய தேர்பவனி வருகிற 3-ந்தேதி(சனிக்கிழமை) நடக்கிறது. 

    Leave A Comment