• Login / Register
  • ஆன்மிகம்

    கன்னியாகுமரி பகவதி அம்மன்; நாளை வைகாசி விசாக திருவிழா ஆரம்பம்

    புகழ்பெற்ற, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி இன்று மாலை 5 மணிக்கு நாகர்கோவில், கோட்டார் இளங்கடை பட்டாரியர் சமுதாய ருத்ரபதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சார்பில் கொடிப்பட்டம் மரபுப்படி வாகனங்களில் ஊர்வலமாக விவேகானந்தபுரத்துக்கு எடுத்து வரப்படுகிறது. 

    பின்னர் விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு மத ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டான நிகழ்ச்சியாக கன்னியாகுமரியை சேர்ந்த கிறிஸ்தவ மீனவர்கள் கொடிமர கயிறை மேள தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் ஒப்படைக்கிறார்கள். 

    நாளை கொடியேற்றத்துடன் தொடங்கும் விழா அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. 9-ம் நாள் திருவிழாவான ஜூன் மாதம் 1-ந் தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது. 2-ந் தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.



    Leave A Comment