கன்னங்குளம் உபகார மாதா ஆலய திருவிழா இன்று ஆரம்பம்!
நெல்லை மாவட்டம் கன்னங்குளத்தில் 171 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித உபகார மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா இன்று தொடங்கி 28-ந் தேதி வரை நடக்கிறது.
இன்று மாலை 5 மணிக்கு ஜெபமாலை, மிக்கேல் அதிதூதர் சப்பர பவனிஇ மாலை 6 மணிக்கு புதிய மாதா கெபி அர்ச்சிப்பு, புதிய இல்லம் திறப்பு விழா, இரவு 7 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடக்கிறது.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்குகிறார். மண்ணின் மைந்தர் அருட்பணியாளர் தேவநவமணி முன்னிலை வகிக்கிறார்.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடக்கிறது. ஒன்பதாம் திருவிழாவான 27-ந் தேதி இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது.
Leave A Comment