• Login / Register
  • ஆன்மிகம்

    புனித ரமலான் நோன்பு இன்று முதல் ஆரம்பம்!

    இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகளில் ரமலான் நோன்பு இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.

    ரமலான் பிறை தெரிந்ததை தொடர்ந்து தராவிஹா என்னும் சிறப்பு தொழுகையுடன் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பை தொடங்கினர்.

    ஷபான் மாதத்தின் 30-ம் நாளில் வானில் தோன்றும் பிறையை அடிப்படையாகக் கொண்டு ரமலான் நோன்பு தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்தார்.

    ரமலான் நோன்பின்போது ‘சஹர்’ எனப்படும் காலை உணவை 4 மணிக்கே சாப்பிட்டு, சூரியன் உதயத்துக்குப் பின் நோன்பு இருப்பார்கள். நாள் முழுவதும் தண்ணீர், உணவு அருந்தாமல் சூரியன் மறைந்த பிறகு நோன்பை முடித்துக் கொள்வார்கள். நோன்பு நடைபெறும் 30 நாட்களும் பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகையும், மாலை நேரங்களில் நோன்பு கஞ்சி வழங்கப்படும்.

    Leave A Comment