• Login / Register
  • ஆன்மிகம்

    சிதம்பரம் நடராஜர் கோயில் : மார்ச் 5 மகாருத்ர யாகம்

    சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் வீற்றுள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு  மகாருத்ர யாகம் மார்ச் 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை வெகு சிறப்பாக நடைபெறுகிறது. மேலும்  மாசி மாத மகாபிஷேகம் நடைபெறுகிறது.

    மாசி மாத மகாபிஷேகம் சித்சபை முன்பு உள்ள கனகசபையில் நாளை மார்ச்.5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு பால், சந்தனம், தேன், தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், புஷ்பம், விபூதி உள்ளிட்டவை குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை செய்யப்படவுள்ளது. மகாபிஷேகத்தை முன்னிட்டு காலை மகாருத்ரயாகம் மற்றும் வைபவம் நடைபெறுகிறது.

    மகா ருத்ர ஹோமம் மற்றும் யாகத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை முக்குறுணி விநாயகர் கோயிலில் அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. மார்ச்.4-ம் தேதி சனிக்கிழமை காலை நவக்கிரக சன்னதியில் நவக்கிரக ஹோமம், ஆச்சாரிய வர்ணம், மதுபர்க்கம், தனபூஜை நடைபெறுகிறது. மார்ச்.5-ம் தகேதி காலை சித்சபையில் லட்சார்ச்சனையும், நடனப்பந்தலில் யாகசாலை கடம் ஸ்தாபனம் செய்யப்படுகிறது. 

    பின்னர் மகா ருத்ர ஜபம், மகா ருத்ர ஹோமம் மகா பூர்ணாஹூதி, வடுக பூஜை, கன்யா பூஜை, சுவாசினி பூஜை, தம்பதி பூஜை, கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வபூஜை நடைபெறுகிறது. பின்னர் யாகசாலையிலிருந்து கடம் புறப்பட்டு கனகசபையில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகா ருத்ர மகாபிஷேகம் நடைபெறுகிறது. 

    Leave A Comment